சுற்றுலா பயணிகள் பேருந்து ரயிலுடன் மோதி விபத்து.

களுத்துறை – வாஸ்காடு பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்கும்போது பேருந்து ரயிலுடன் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்தே இந்த விபத்தில் சிக்கியதாகவும், இருவர் மாத்திரம் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செக் குடியரசு நோக்கிச் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இந்த விபத்திற்கு முகம் கொடுத்ததுடன், அவர்கள் இன்று (29) காலை 9.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தனர்.

விபத்தில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரதத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.