வீடமைப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!
குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சீன அரசின் உதவியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சீன அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹோங்வும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்து இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று பத்தரமுல்ல, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மூன்றாண்டுகளில் நிர்மாணிக்கப்படும் இந்த 1,996 வீடுகளில் 1,888 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும், 108 வீடுகள் இந்நாட்டு படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.