புதிய அமைச்சர்கள் நியமனம் .
இரு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியால் திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதோடு நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.
முன்னதாக விளையாட்டுத்துறை, நீர்ப்பாசன மற்றும் இளைஞர் விவகார அமைச்சுப் பொறுப்பில் இருந்து உனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி நீக்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.