பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ்!

பிரித்தானியாவில் தற்போது பன்றிகளில் பரவும் வைரஸைப் போன்ற காய்ச்சலான ஸ்ட்ரெய்ன் A(H1N2)v மனிதர்களுக்கும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை இங்கிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.