மாவீரன்’ என எழுதப்பட்ட பெயர் பலகை : பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்.

முள்ளியவளையில் தனது முச்சக்கரவண்டியில் ‘மாவீரன்’ என எழுதப்பட்ட பெயர் பலகையை காட்சிப்படுத்தியிருந்தமைக்காக அதன் சாரதியான தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

‘மாவீரன்’ என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தும் பெயர். ஆகவே குறித்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோகிறார். அவரைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை செய்யவேண்டும், எனக் கூறியே பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர். பின்னர் சட்டத்தரணிகளின் விரைவு நடவடிக்கையினால் குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டார். உயிர்க்கொடையாளர்கள் எம் மாவீரர்கள் குறித்த இந்த  சம்பவமானது, மாவீரரை தமிழர்கள் மறந்தாலும், தமிழர்கள் மீது வன்முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்துக்கொண்டிருக்கும் பேரினவாத சிறீலங்கா அரசும், அதன் படைக்கட்டமைப்பும் மறக்காது என்பதையே சொல்லி நிற்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வளவு தடைகள், அச்சுறுத்தல்கள், கைதுகள், விசாரணைகளுக்குப் பின்பும் ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் தமிழ் மக்கள் சுயமாகத் திரள்வதற்கு இதுவேதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.