மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான அழகியாக நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் பட்டத்தை வென்றார்.
மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான அழகியை தேர்வு செய்வதற்கான இறுதி போட்டி நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் மிஸ் யூனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றார்.
இந்தியாவை சேர்ந்த ஸ்வேதா ஷர்தா மகுடத்தை தவறவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்தியா உள்பட பல நாடுகளில் அழகி போட்டிகள் நடந்து வருகிறது.
ஒவ்வொரு பெரிய நகரங்கள் வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும், நாடுகள் வாரியாகவும் அழகி போட்டிகளை நடத்தி வருகின்றன.
இந்த மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான போட்டி மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் நாட்டில் நடந்து வருகிறது.
அந்த நாட்டின் தலைநகரான சான் சால்வடாரில் இறுதி போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டியை முன்னாள் பிரபஞ்ச அழகி ஒலிவியா கல்போ நடத்துகிறார். சான்சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் இந்த பைனல் போட்டி தொடங்கியது.
இதில் மொத்தம் 90 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் தான் மிஸ் யூனிவர்ஸ் 2023 பட்டத்தை வெல்ல உள்ளனர். இந்தியா சார்பில் ஒருவர் பங்கேற்றுள்ளார்.
இந்த மிஸ் யூனிவர்ஸ் 2023 இறுதி போட்டி மிஸ் யூனிவர்ஸ் யூடியூப் சேனல் மற்றும் மிஸ் யூனிவர்ஸ் எக்ஸ் பக்கத்திலும் நேரடியாக ஒளிரப்பப்பட்டது.