உலகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் ஆளவந்தான்

ஆளவந்தான் திரைப்படம் டிசம்பர் 8ம் திகதி உலகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கமல்ஹாசனுடன் ரவீனா டாண்டன், அனுஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கும் ஆளவந்தான் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார்.

இத்திரைப்படத்தில் அதி நவீன டெக்னாலஜியாகக் கருதப்பட்ட motion control camera பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் இந்த டெக்னாலஜி முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆளவந்தான் படத்தில் தான்.

வெளியான போது வரவேற்பை பெறாத இத்திரைப்படத்தை பின்னாளில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில், மீண்டும் அடுத்த மாதம் திரையில் வெளியாகவுள்ளது.