புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு  பிரித்தானிய அரசு   நாடு கடத்தும் திட்டத்தை உச்ச நீதிமன்ற ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

புதன் கிழமை  இந்தத் திட்டம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஞ்சம் கோருபவர்கள் தாயகம் திரும்புவதற்கான ‘உண்மையான ஆபத்தில்’ இருப்பார்கள், அவர்கள் புகலிடம் கோருவதற்கான காரணங்கள் நியாயமானதா இல்லையா  என்பதனை ஆராய வேண்டியது முக்கியம். இது சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறும் செய்ல் என தெரிவித்துள்ளது.

ஆனால் ரிஷி சுனக், கொள்கைக்கு எதிரான சட்ட சவால்களின் தீர்ப்பில் மாற்றங்களை கொண்டுவர  அரசாங்கம் முன்னோக்கி செயற்படும் என வலியுறுத்தியுள்ளார். ரிஷி சுனக் ருவாண்டா சட்டத்தை முன்னிறுத்துவதற்கான தனது திட்டங்களுடன் ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் விவாதத்தினை மேற்கொண்டுள்ளார்.  ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்புவதற்கான உச்ச நீதிமன்றத்தின் தடையை நீக்குவதற்கும், எம்.பி.க்கள் மற்றும்  உறுப்பினர்களுடன் ஒரு சாத்தியமான விவாதத்தை அமைப்பதற்கும் மற்றும் வசந்த காலத்தில் விமானங்கள் புறப்படுவதற்கான இலக்கை  ரிஷி நோக்கி சுனக்கின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு முழு சட்டத்தை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.