தொடர்ந்து உருவாகும் தாழமுக்கங்களால் நாடெங்கும் மழை காற்று நீடிப்பு..

Kumarathasan Karthigesu-பாரிஸ்

ஃபிரடெரிகோ”(Frederico) எனப் பெயரிடப்பட்ட மற்றொரு தாழமுக்கம் அத்திலாந்திக் கரையோரமாக நாட்டைக் கடக்க இருப்பதால் நாட்டின்  பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் காற்றுடன் கூடிய மழை நீடித்து வருகிறது. குறிப்பாக வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்த நாட்டின் வட பெரும்பாக்கத்தில் மழை நீடிக்கிறது.

பாரிஸ் பிராந்தியத்திலும் மழைக் காலநிலை காணப்படுகிறது.

ஃபிரடெரிகோ புயல் வியாழன்-வெள்ளி இரவுப் பொழுதில் கரையைக் கடக்க இருப்பதால் Brittany மற்றும் HautsdeFrance பிரதேசங்களில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அண்மையில் ஏற்பட்ட சியரான் (Ciaran) மற்றும் டொமிங்கோஸ் (Domingos) புயல்களைப் போன்று இது தீவிரமான புயலாக மாறாது என்றும் மிதமான வேகத்திலேயே காற்று வீசக் கூடும் என்றும் பிரான்ஸின் காலநிலை அவதான நிலையமாகிய “Météo-France” தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வெள்ளப் பாதிப்பைச் சந்தித்துள்ள Nord-Pas-de-Calais, Vendée மற்றும் Charente-Maritime பகுதிகள் செம்மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் உள்ளன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வியாழக்கிழமை காணப்படுகின்ற மழைப் பொழிவு நாளை வெள்ளிக்கிழமையும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">