தகுதியற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் வகையில் புதிய சட்டம்; விஜேதாஸ அறிவிப்பு.

உத்தேச பாராளுமன்ற தரநிலை சட்டமூலம் நடைமுறைக்கு வந்தப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் பாராளுமன்ற தரநிலை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த சட்டமூலம் தொடர்பான விளக்கத்தை பிரதமர் தினேஸ் குணவர்தன கட்சித் தலைவர்களுக்கு வழங்க உள்ளார். அதற்காக விசேட கட்சித் தலைவர் கூட்டமொன்றும் நடத்தப்படும்.

கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நடத்தும் கலந்துரையாடலின் பின் சட்டமூலத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும்.எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு முடியாத வகையில் சோல்பரி யாப்பில் உருவாக்கப்ட்ட விதிகள்தான் இன்னமும் பின்பற்றப்படுகின்றன.இந்தச் சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை நீதிமன்றங்களும் வழங்கியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.