இலங்கையை அண்மித்த பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

இலங்கையை அண்மித்து பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது.

இலங்கையின் தென் பகுதியில், கொழும்பிலிருந்து சுமார் 1326 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், 10 கிலோமீட்டர் ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.