2024 Budget- முழுமையான விபரம்.

  • கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அப்பால் 600 ஏக்கர் நிலம் சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒதுக்கப்படும்.
  • பின்னவல – கித்துல்கல ஒரு சுற்றுலாப் பாதை, 03 வருட திட்டத்திற்காக 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
  • செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள். இதற்காக அடுத்த வருடத்திற்கு 03 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
  • அரச ஓய்வு விடுதிகளை நவீனமயமாக்கி, சுற்றுலாவை மேம்படுத்த அவற்றைப் பயன்படுத்துவதற்கான திட்டம். அதற்காக 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
  • வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை நடவடிக்கையாக, இறக்குமதி செஸ், துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட சுங்க வரி அல்லாத இறக்குமதி வரிகளை நீக்க நடவடிக்கை
  • உள்கட்டமைப்பு கூட்டுத்தாபனத்தை அமைப்பதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
  • சுற்றுலாத்துறையை மேம்படுத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவங்களுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டு முதல் நீண்டகால வேலைத்திட்டம், 1 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய மற்றும் கண்டி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு புதிய முதலீட்டு வலயங்கள் நிறுவப்படும்.
  • புதிய நிலச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும், புதிய சட்டங்கள் மற்றும் காலாவதியான சட்டங்கள் திருத்தப்படும் அதன்படி, 60 புதிய சட்டங்கள் மற்றும் திருத்தச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • கடன் பெறுவதற்கான வரம்பு 3900 பில்லியன் ரூபாயிலிருந்து 7350 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்படும்.
  • வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை தீர்ப்பதற்கு 3,000 பில்லியன் ஒதுக்கப்படும்.
  • 2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொதுக் கடன் 95 வீதமாகக் குறைக்கப்படும்
  • அரசுக்கு சொந்தமான இரண்டு வங்கிகளின் இருபது சதவீத பங்குகள் முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
  • அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
  • வெளிநாட்டு கடனை மறுசீரமைத்த பின்னர், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதிக்கான பணிகள் சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்படும்.
  • நாட்டின் பொதுக் கடன் 2022 இல் 128% இலிருந்து 2023 இல் 95% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மாகாண சபையின் வருமானத்தை மாகாணத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கான முன்மொழிவு.
  • நாட்டின் கலாசாரத்தை வளர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம்.
  • 2025 லிருந்து, மாகாண சபை வருமானத்தில் சுமார் 50 வீதத்தை தொடர் செலவுகளாகப் பயன்படுத்துவதற்கும் மேலதிக வருமானத்தை மூலதனச் செலவுகளாகப் பயன்படுத்துவதற்கும் தீர்மானம்.
  • புறக்கோட்டை, காலி, மாத்தறை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் போன்ற பெரு நகரங்களை அண்மித்த ரயில் நிலைய நகரங்களை நிர்மாணிப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அழைப்பதற்கான யோசனை.
  • பாடசாலை மற்றும் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப 1.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு, பற்றாக்குறை உள்ள மாகாணங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு முன்னுரிமை.
  • பெண்கள் அதிகாரம் பெற புதிய சட்டங்கள்.
  • இளைஞர் சமூகத்தை வலுப்படுத்த 300 மில்லியன் ரூபா.
  • வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்திற்கு 2,000 மில்லியன்.
  • காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு. வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு மேலும் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
  • யாழ்ப்பாணம் பூநகரி நகர் அபிவிருத்தி – 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • யாழில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு, யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு 2024 ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிரந்தர தீர்வு.
  • விவசாயத்தை நவீனமயமாக்கவும் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும் தீர்மானம்.
  • சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த அரச வங்கிகள் ஊடாக இலகு வட்டி வீதத்திலான கடனுதவி, இதற்காக 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
  • திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்ய்யப்படும்.
  • சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்குவதற்காக ஹோட்டல்களில் உள்ளூர் ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களை நிறுவ 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
  • ஏனைய நாடுகளின் நிலைக்கு ஏற்ப மருத்துவ ஆராய்ச்சி, 75 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு .
  • 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்.
  • தொழிற்கல்வி நிறுவனங்களை மாகாண சபைகளுக்கு மாற்ற தீர்மானம்.
  • தகவல் தொழில்நுட்ப பட்டதாரி பயிற்சி திட்டம்.
  • ஆங்கில மொழி கல்வியறிவுக்கான திட்டம்.
  • பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து அரச பல்கலைக்கழகங்கள் புதிய காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தல்.
  • அரசு சாரா பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்த வலுவான சட்டங்கள் கொண்டு வரப்படும்.
  • தனியார் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு சலுகை கடன் திட்டம். வேலை கிடைத்தவுடன் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு..
  • நாட்டில் உள்ள பழைய கல்விமுறை நீக்கப்பட்டு நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை ஏற்படுத்தப்படும்..
  • உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு.
  • கிராமங்களில் வீதிகள் அபிவிருத்திக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். .
  • நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 4 பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும்.
  • பல்கலைக்கழகங்களைத் தொடங்கும் அதிகாரம் தனியார் துறைக்கு.
  • மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்திக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
  • பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை, இதற்காக 4 பில்லியன் ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கீடு.
  • பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2024 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து வரி அறவிடப்படாது.
  • கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதக் கொடுப்பனவுகளுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு .
  • அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக அடுத்த ஆண்டுக்கு 283 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஓய்வூதியம் பெறுவோருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 2,500 ரூபாய் (விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்) அதிகரிக்க முன்மொழிவு .
  • 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தேர்தலுக்கானது அல்ல மாறாக எதிர்காலத்துக்கான திட்டம்.
  • ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான வாழ்க்கைச் செலவுகளுக்கான நிலுவைத் தொகை அடுத்த ஆண்டு ஒக்டோபர் முதல் தவணை முறையில் வசூலிக்கப்படும் – ஜனாதிபதி
  • 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.
  • ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளாகியுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது.
  • அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் / பணத்தை அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும்..
  • ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • பின்னடைவைச் சந்தித்த இலங்கையின் பொருளாதாரம், கடந்த ஆண்டில் வெற்றிகரமாக மீண்டுள்ளது. கடின உழைப்புக்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் இருந்தபோதிலும், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் மற்றவர்கள் ஈடுபட்டனர் நாட்டின் நலனுக்காக அனைவரும் முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கத்திற்கு வெற்றிகரமாகக் குறைத்தமையே நாட்டின் மீட்சிக்குக் காரணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.