காஸாவில் போர் நிறுத்தப்பட்டால், ஹமாஸ் மீண்டும் தாக்குதல் நடத்தும்’-அமெரிக்கா தெரிவிப்பு

ஹமாஸை அழிக்கிறோம்’ என்ற பெயரில் பாலஸ்தீனத்தின் காஸா மக்கள்மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுவரை காஸாவில் மருத்துவமனைகள், அகதிகள் முகாம், பள்ளிகள், குடியிருப்புகள் உட்பட நகரம் முழுவதும் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 9,000-க்கும் மேற்பட்ட காஸாவாசிகள் உயிரிழந்திருக்கின்றனர். இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இரு தரப்பையும் சேர்த்து பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துவிட்டது.போரை நிறுத்துமாறு ஐ.நா-வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் கூட போரை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். இந்த நிலையில்,ஹஹகாஸாவில் போர் நிறுத்தப்பட்டால், ஹமாஸ் மீண்டும் தாக்குதல் நடத்தும்” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியிருக்கிறார். போரை நிறுத்த வலியுறுத்தும் அரபுத் தலைவர்களுடன். ஜோர்டானில் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய ஆண்டனி பிளிங்கன், ஹஹதற்போது போர்நிறுத்தம் என்பது ஹமாஸை அப்படியே விட்டுவிடக்கூடும்.

இதனால் அவர்கள் ஒருங்கிணைந்து அக்டோபர் 7-ல் செய்ததை மீண்டும் செய்ய முடியும். எந்தவொரு நாடும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இஸ்ரேலின் உரிமையையும், தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய கடமையை அவர்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்துவதும் முக்கியம்’ என்று கூறினார்.இருப்பினும் இதை மறுத்த ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சர் அய்மன் சஃபாடி ஹஇதுவொரு தற்காப்பு என்பதை நாங்கள் ஏற்க மாட்டோம். பொதுமக்களைக் கொல்லுதல், அவர்களின் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள், தேவாலயங்களை அழித்தல் எனப் போர் தொடர்கிறது. எந்த வகையிலும் இதை நியாயப்படுத்த முடியாது.

மேலும், இது எந்தவிதத்திலும் இஸ்ரேலுக்குப் பாதுகாப்பையோ, அமைதியையோ தராது. எனவேஇ,இந்தப் போர் நிறுத்தப்படுவதை நாம் இப்போதே உறுதிசெய்ய வேண்டும்’ என்றார். அதேபோல், எகிப்து வெளியுறவு அமைச்சர் சமே ஷோக்ரி ,ஹசர்வதேச நாடுகளின் பொறுப்பு எப்போதும் விரோதத்தை நிறுத்துவதுதானே தவிர, வன்முறையின் தொடர்ச்சியை ஊக்குவிப்பதல்ல’ என்றார். இறுதியில், போரை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என ஆண்டனி பிளிங்கனுக்கு பிற தலைவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.