அவசர கோப்ரா குழுவின் கூட்டம் இன்று: அழைப்பு விடுத்தார் பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக்.
Remembarance தின வன்முறை குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். மத்திய கிழக்கில் உள்ள உள்நாட்டுப் போரின் தாக்கம் குறித்து விவாதிக்க அரசாங்கத்தின் அவசர கோப்ரா குழுவின் கூட்டம் இன்று அழைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியதில் இருந்து பிரிட்டனில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேசத்தின் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் சீர்குலைக்கப்படலாம் மற்றும் வன்முறை வெடிக்கலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், நினைவு தினத்திற்காக திட்டமிடப்பட்ட பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சனிக்கிழமை மத்திய லண்டனில் நடைபெறவிருக்கும் அணிவகுப்பு ‘ஆத்திரமூட்டக்சுடிய மற்றும் அவமரியாதைக்குரியதான செயல் என ரிஷி சுனக் குறிப்பிட்டார். திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதா இல்லையா என்பது குறித்த செயல்பாட்டு முடிவுகள் பெருநகர காவல்துறையினருக்கானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணியை கைவிடுமாறு கோரியபோதும் ஆனால் அமைப்பாளர்கள் இதுவரை கோரிக்கையை மீறியுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ‘கண்ணியமான பிரிட்டிஷ் மக்கள் இந்த குண்டர் மிரட்டல் மற்றும் தீவிரவாதத்தின் காட்சிகளை போதுமான அளவு பெற்றுள்ளனர் என்பதை வெறுப்பு அணிவகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.