லண்டனில் உள்ள 10 டவுனிங் வீதியில் பிரித்தானிய பிரதமர் கொண்டாடிய தீபாவளி கொண்டாட்டம்


ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோர் லண்டனில் உள்ள 10 டவுனிங் தெருவில் ஒரு பண்டிகை நிகழ்வை நடத்தி தீபாவளியைக் கொண்டாடினர்.

சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் பாரம்பரிய விளக்குகள் மற்றும் தீபங்களை ஏற்றிய நிகழ்வின் காட்சிகளை இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகபிரிவு பகிர்ந்துள்ளது. கொண்டாட்டங்களுக்கு மத்தியில், சுனக் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே தொலைபேசியில் கலந்துரையாடல் நபெற்றதாகவும், அதிக போட்டி நிறைந்த உலகில் இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை தலைவர்கள் ஆராய்ந்தனர் என்றும் தெரிவிக்கப்படகின்றது.

10 டவுனிங் வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை நடத்த்தியதோடு பிரித்தானி பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி, ஆகியோர்  உலகெங்கிலும் உள்ள இந்து சமூகத்திற்கு தங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர். பாரம்பரிய விளக்குகள் மற்றும் தீபங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த நிகழ்வு, திருவிழாவின் கலாச்சார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதோடு, இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே வளர்ந்து வரும் கலாச்சார பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டியது எனத் தெரிவிக்கப்படுகின்றது.