குடியேறிகளுக்கு அரச மருத்துவ உதவி இனிக் கிடைக்காது! செனட் அனுமதி

சட்டப் பிரேரணையின் முக்கிய சரத்தை ஆதரித்து வாக்களிப்பு

Kumarathasan Karthigesu-பாரிஸ்

வீஸா மற்றும் வதிவிட ஆவணங்கள் ஏதுமற்ற வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு (sans-papiers) இதுவரை காலமும் கிடைத்துவந்த முழு இலவச அரச மருத்துவ உதவியை (l’aide médicale d’Etat – AME) ரத்துச் செய்கின்ற சட்ட விதிக்கு ஆதரவாக செனட் சபை வாக்களித்திருக்கிறது.

அரச மருத்துவ உதவிக்கு மாற்றாக AMU எனப்படுகின்ற அவசர மருத்துவ உதவி (aide médicale d’urgence) அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி குடியேறிகள் மிக அவசரமான – ஆபத்தான-நோய்களுக்கு மாத்திரமே அரச மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

செனட் சபையில் இந்தச் சட்ட விதி மீது கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 200 வாக்குகளும் எதிராக 136 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இச் சட்டமூலம் நாடாளுமன்றத்தின் கீழ்ச் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதுவரை காலமும் வதிவிட அனுமதி கிடைக்காத வெளிநாட்டவர்களுக்கு அவர்கள் நாட்டுக்குள் வந்து தங்களைப் பதிவு செய்த பின்னர் வதிவிட அனுமதி பெற்றுக் கொள்வதற்கு முன்னரான காலப் பகுதியில் வழங்கப்பட்டுவந்த இலவச அரச மருத்துவ உதவியை இல்லாதொழிக்கின்ற இந்தச் சட்ட விதி புதிய குடியேற்றச் சட்டப்பிரேரணையில் இடம்பெறுகின்ற மிக முக்கியமானதும் – கடுமையானதுமான – ஒரு சரத்தாக இருக்கிறது. இதன் மீதான விவாதங்கள் கடந்த பல மாதங்களாக அரசியல் மட்டங்களில் நீடித்து வந்தன.

வலதுசாரிகளால் புகுத்தப்பட்ட இந்தச் சரத்தை இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்து வந்தன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">