அலோகேஷனுக்கு வருகின்றது ஆப்பு! 5 வருடங்கள் நாட்டில் வசித்திருந்தாலே குடும்ப நிதி உதவிகள்

சட்டத் திருத்தத்துக்கு செனட் சபை ஒப்புதல்.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரான்ஸில் வெளிநாட்டவர்கள் வீட்டு வாடகை நிதி உதவி உட்பட குடும்ப நல உதவிக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதாயின் நாட்டில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனை விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.

வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து அறிமுகப்படுதப்படுகின்ற இந்தச் சட்டத் திருத்தத்தை வலதுசாரிப் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த (ரிப்பப்ளிக்கன்) செனட் உறுப்பினர்கள் குழு ஒன்று புதிய குடியேற்றச் சட்டத்துக்குள் புகுத்தியிருந்தது. அதற்குச் செனட் சபை ஒப்புதல் அளித்திருக்கிறது.

குடும்ப உதவிக் கொடுப்பனவு (allocations familiales) , வீட்டு வாடகை உதவிக் கொடுப்பனவு (l’Aide personnalisée au logement – APL), ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதாயின் வெளிநாட்டவர்கள் குறைந்தது ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்.

தற்போதுள்ள சட்டங்களின் படி, பிரான்ஸுக்குள் வருகின்ற வெளிநாட்டவர்கள் சமூக உதவிக் கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிப்பதாயின் நாட்டு எல்லைக்குள் ஆறு மாத காலம் தங்கி வாழ்ந்திருந்தாலே போதுமானதாகும்.

புதிய குடியேற்றச் சட்டத்தின் உட் பிரிவுகள் ஒவ்வொன்றையும் நாடாளுமன்றத்தின் மேற்சபையாகிய செனட் சபை தனித்தனியே பரிசீலித்து வருகிறது.

செனட் சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சட்ட விதிகள் பின்னர் நாடாளுமன்றத்தின் கீழ்ச் சபையான சட்ட சபையிலும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டாலேயே சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">