சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களின் இரட்டை வேடம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணை.

சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களின் இரட்டை வேடம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். வழிபாட்டுத் தலங்கள், அரசு மற்றும் பிற நிறுவனங்களில் பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ கடமைகளுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணியாளர்கள் அவர்களின் நியமிக்கப்பட்ட கடமைகளுக்கு தொடர்பில்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்விலவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.வழிபாட்டுத் தலங்களில் பராமரிப்புப் பணிகள், விவசாயப் பணிகள், யானை வேலிகளைப் பராமரித்தல் மற்றும் பல்வேறு நிறுவனப் பொறுப்புகள் தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களை மீறும் பணியாளர்களின் சேவையை உடனடியாக இடைநிறுத்தும் உத்தரவும் இராஜாங்க அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது.