நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ். விஜயம்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சித்த ராமன் தலைமையிலான உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நிதியமைச்சர் இன்று (03) வடமாகாணத்திற்கு விஜயம்மேற்கொண்டதுடன் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்தனர்
யாழ்ப்பாணம் மத்திய கலாசார மண்டபத்தில் நடைபெறும் புத்தாக்க தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டதுடன், வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொண்டார்.
விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வடமாகாண ஆளுநர் எச்.எம்.எஸ். சார்ல்ஸ் வரவேற்றிருந்தார். யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் யாழ் பொது நூலகர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்தையும் பார்வையிட்டார்.
நூலகத்தில் உள்ள இந்தியன் கோர்னரில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலனினால், யாழ்ப்பாணத்தை நினைவுபடுத்தும் பனை மரம் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், யாழ் பொது நூலகத்தின் வரலாறு அடங்கிய நூல் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய துணை தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.