இலங்கையில் 120 மாணவர்களுக்கு தொழுநோய்.

இலங்கையில் 14 வயதுக்கு உட்பட்ட 120 மாணவர்கள் கடந்த 9  மாதங்களில், தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் கூறுகிறது.

அதிக எண்ணிக்கையான  மாணவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 31 ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பாடசாலை மாணவர்களும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவர்களும்  இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில், முழு நாட்டிலும் 1150 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.