மன்னார் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்: மன்னார் பிரஜைகள் குழு குற்றச்சாட்டு.
மன்னார் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவுஸ்திரேலிய சுரங்க நிறுவனமொன்று அதன் உள்ளூர் பங்காளிகள் மூலம் மன்னார் தீவின் கரையோரப் பகுதியில் பொய்யான சாக்குப் போக்குகளின் கீழ் நிலத்தை வாங்குகிறது என மன்னார் பிரஜைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
மன்னார் பிரஜைகள் குழுவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் விசேட ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் குழுவின் பிரதிநிதி ஜேம்ஸ் ஜேசுதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
மன்னாரின் மின்சார தேவைக்காக சோலார் பேனல்களை நிறுவுவதாக கூறி, குறைந்த விலையில் குடியிருப்பாளர்களின் காணிகளை நன்கு அறியப்பட்ட உள்ளூர்வாசிகள் வாங்குகின்றனர். எவ்வாறாயினும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவுஸ்திரேலிய சுரங்க நிறுவனமான டைட்டானியம் சாண்ட்ஸ் லிமிட்டெட்டுக்கு தாது மணல் அகழ்வுக்காக விற்பதே உண்மையான காரணம்.
சுரங்கத் தொழில் தொடங்கினால், வரலாற்று, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் தீவின் அழிவை இது உணர்த்தும் என்பதை உள்ளூர்வாசிகள் உணர்ந்து வருகின்றனர். 40 அடி வரையிலான சுரங்கங்களில் கணிசமான கடல் நீர் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்தும். இது மக்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் விவசாயத்துக்கு பொருந்தாது.டைட்டானியம் சாண்ட்ஸ் லிமிடெட் மன்னாரின் கரையோர பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்ய விரும்பவில்லை என அவுஸ்திரேலிய பங்குச் சந்தைக்கு பகிரங்கமாக அறிவித்தது.
இப்படியிருந்தால், இந்தப் பகுதிகளில் ஏன் நிலம் வாங்குகிறார்கள்? இலங்கையின் சட்டங்களில் அண்மைய மாற்றங்கள் காணி உரிமையாளர்கள் தங்களுடைய சொந்த சொத்துக்களில் அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதிப்பதும் இதற்கு முன்னர் ஆய்வு உரிமம் உள்ளவர்கள் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
கடந்த ஆண்டு டைட்டானியம் சாண்ட்ஸ் லிமிடெட் தாது மணல் ஆய்வில் ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்றது. பின்னர் சுரங்க விண்ணப்பத்தை சமர்ப்பிக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அழைக்கப்பட்டது.புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தால் முன்னர் இதே ஆய்வு உரிமங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாண்ட்ஸ் லிமிடெட் சுரங்க நிறுவனம் மற்றும் அவற்றின் உள்ளூர் துணை நிறுவனங்களான கில்சித் எக்ஸ்ப்ளோரேஷன்இ ஹேமர்ஸ்மித் சிலோன்இ சுப்ரீம் சொல்யூஷன்இ சனூர் மினரல்ஸ்இ ஓரியன் மினரல்ஸ் ஆகியவற்றின் பொய்கள் மற்றும் ஊழல்களின் நீண்ட பட்டியலில் ‘சோலார் பேனல் என தெரிவிக்கப்பட்டது.