இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு ஒரு முகத்தையும் இந்தியாவுக்கு ஒரு முகத்தையும் காட்டி சில காரியங்களை சாதிக்கிறது- சுரேஷ் பிரேமச்சந்திரன்.
இப்பொழுது இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு ஒரு முகத்தையும் இந்தியாவுக்கு ஒரு முகத்தையும் காட்டி சில காரியங்களை சாதித்து வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழில் இடம்பெற்ற யாழில் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனா தொடர்பாக இலங்கையில் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பல்வேறு பட்ட சிக்கல்கள் கருத்துக்கள் கூறப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. இந்தியா தன்னுடைய பாதுகாப்பு நலன்களிலிருந்து சீனா இலங்கையில் நிலை கொள்வது என்பது தங்களுக்கு ஒரு பாதுகாப்பு குந்தகம் என்பதாக கூறி வருகின்றது. இலங்கையை தனது கைவசம் வைத்திருப்பதற்காகவும் இலங்கையின் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பொழுது பல பில்லியன் டொலர்களை இந்தியா இலங்கைக்கு உதவிக்கரமாக வழங்கி வந்திருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் இலங்கையில் எப்பொழுது ஒரு அனர்த்தம் பாரிய இழப்புக்கள், பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட பொழுதும் உடனடியாக இந்தியா முன்வந்து பல விஷயங்களை செய்திருக்கின்றது.
இப்பொழுது இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு ஒரு முகத்தையும் இந்தியாவுக்கு ஒரு முகத்தையும் காட்டி சில காரியங்களை சாதிக்கின்றது. முக்கியமாக சீனாவினுடைய யுத்தக்கப்பல்கள் அல்லது ஆய்வுக்கப்பல்கள் என்ரா அடிப்படையில் கப்பல்கள் இங்கு வருவதும் இலங்கை கடல் பரப்புக்குள் அவர்களை ஆய்வுகளை மேற்கொள்வது என்பதுவும் அந்த ஆய்வுகள் என்பது வெறுமனே என்ன காரணத்துக்காக இலங்கையினுடைய கடல் பரப்புக்குள் சீனா ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற கேள்வி ஆகவே இவை எல்லாவற்றையம் பார்க்கின்ற பொழுது சீனா ஒரு பொருளாதார நலன்களின் அடிப்படையில் செய்வதாக எங்களுக்கு தெரியவில்லை.
மாறாக சீனாவை பொறுத்தவரையில் அமெரிக்காவுக்கு மாற்றீடாக உலகத்தினுடைய ஒரு பொலிஸ்காரனாக வரவேண்டும் என்பதில் அது குறியாக இருக்கின்றது. அந்த வகையில் தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தியும் 99 வருட குத்தகைக்கு அது எடுத்திருக்கிறது.
இப்பொழுது ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கின்ற ஒரு பல்கலைக்கழகம் அடுத்ததாக இலங்கையில் தான் சீனா தனது கடல் படையை உருவாக்க இருக்கின்றது என்ற ஒரு கருத்தையும் கூறி இருக்கின்றது. இப்பொழுது பெண்டகன் கூட சொல்கிறது அடுத்த இராணுவ தளமாகவோ, கடல் படை தளமாகவோ அம்பாதோட்டை மாற்றப்படுவதற்கான முழு வாய்ப்புக்கள் இருக்கிறது என்பதுவும் கூறப்பட்டிருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில் அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி சீனாவுக்கு போய் வந்ததை தொடர்ந்து சீனாவினுடைய ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வந்திருக்கின்றது. இலங்கையின் கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இவை எல்லாம் இலங்கையில் ஒரு அரசியல் சூறாவளியை உருவாக்கக்கூடிய காரணிகளாக இவை அமைந்து வருகின்றது.
தொடர்ச்சியாக பல்வேறு பட்ட தரப்பட்ட தரப்புகளிலிருந்தும் இவை கூறப்பட்டு முன்வக்கப்பட்டு வந்த பொழுதும் கூட இலங்கை அரசாங்கம் தனது வளங்களை பெருக்கிக்கொள்வதற்கு பதிலாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒரு மூலோபாய புள்ளியில் இலங்கை தேவை என்பதி அமைந்திருப்பதை காரணமாக கொண்டு அது இந்தியாவிடமும் சீனாவிடமும் தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முயல்கிறதே தவிர ஆனால் இரு தரப்பையும் அது ஏமாற்றி தான் வருகின்றது.
அந்த ஏமாற்றமென்பது இலங்கை தனது இராஜத ந்தந்திரமாக கருதுவது எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒருதரப்பில் இந்திய அரசாங்கம் ஏமாற்றப்படுகிறது மறுதரப்பில் சீனா அரசாங்கம் என்பது ஏமாறப்படுகிறது.
இவை மாத்திரமல்லாமல் சீனாவுக்கு மிகப்பெருமளவில் இலங்கையில் தனது நடவடிக்கைக்கு இடம் கொடுத்து வருவதென்பதுவும் ஒரு ஏற்புடைய விஷயமாக இல்லை. இலங்கை என்பது ஒரு கடலால் சூழப்பட்ட ஒரு நாடு. இலங்கை மீனை ஏற்றுமதி செய்ய வேண்டிய ஒரு நாடு. அவ்வாறான ஒரு சூழ்நிலை இருக்கையில் அண்மையில் சீனாவிலிருந்து இலங்கைக்கு மீன் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. 140 கோடி மக்களைக்கொண்ட சீனா தனக்கு தேவையான மீன்வளத்தை பிடிப்பது மாத்திரமல்லாமல் மீனை ஏற்றுமதி செய்கிற ஒரு நிலையில் இருக்கிறது.
ஆனால் 2அரைகோடி சனம் இல்லாத இலங்கையில் சுற்றி வர கடலை வைத்துக்கொண்டு 100 கிலோமீற்றர் கடல் அளவுக்கான எல்லைகளை வைத்துக்கொண்டு இலங்கை வந்து சீனாவிலிருந்து மீனை இறக்குமதி செய்வது ஒரு கேலிக்குரிய நகைப்புக்குரிய ஒரு விடயமாக இருக்கிறது. ஆகவே இந்த இறக்குமதி என்பது இலங்கையில் இருக்கிற மீனவர்களை எவ்வளவு தூரம் பாதிக்கப் போகிறது என்பதுவும் மிக மிக முக்கியமான விடயம். அது வாடா கிழக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத இளநகையிலும் மீன்பிடி என்பது பாதிக்கப்படும். அமைச்சர் சொல்லலாம் இலங்கையில் பிடிபடாத மீன்களை அங்கிருந்து இறக்குமதி செய்கிறோம் என்று.
எங்களுக்கு இந்த நாட்டில் பல்வேறுபட்ட வகையான நூற்றுக்கணக்கான மீன்கள் இங்கே சுற்றி வருகின்ற கடலில் இருக்கின்றது. ஆகவே அந்த மீன்கள் இலங்கை மக்களுக்கு தாராளமாக போதுமானது. அவை ஏற்றுமதி செய்வதற்கு மேலதிகமாகவே இருக்கின்றது. ஆகவே இவற்றை எவ்வாறு செய்வது என்பதை விடுத்து மீனை இறக்குமதி செய்வதில் அமைச்சர் அதற்கான முக்கியத்துவத்தை கொடுப்பதும் என்னும் சொல்ல போனால் எந்த விதமான வரையறைகள், எந்த விதமான வரிகள் இவை எல்லாம் கூட வெளிப்படையாக யாருக்கும் தெரியாது. எவ்வளவு தூரம் இதற்கான வரி விதிக்கப்படுகிறது? சந்தையில் மீன் என்ன விலை விற்கப்படப்போக்கிறது? போன்ற எந்த விஷயங்களும் தெரியாது. ஆகவே வெளிப்படைத்தன்மை அற்று மிக இரகசியமான முறையில் இந்த மீனை இறக்குமதி செய்வது போகின்ற நிலைமைகள் தான் தோற்று விக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே இதனால் இலாபமடையப்போகிறது வெறுமனே அமைச்சராகத்தான் இருக்கப்போவது தவிர இங்கிருக்கூடிய மீனவர்கள் அல்ல. குறிப்பாக சொல்வதென்றால் வட கிழக்கு மீனவர்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே கட்லட்டை பண்ணை என்ற வகையிலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழ் நிலீலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது என்பது மீனவர்களுக்கு இன்னும் பாரிய அழிவுகளை உருவாக்கும்.ஆகவே அரசாங்கமும் சரி அமைச்சரும் சரி இவற்றை ஒரு மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.