நுவரெலியாவில் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

செ.திவாகரன்

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்கு ஆதரவாக நுவரெலியாவிலும் திங்கட்கிழமை (30) நண்பகல் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.