இரா.சம்பந்தனின் பதவி விலகல் குறித்து கூட்டு தீர்மானம்.

தமிழரசுக்கட்சியில் வவுனியா செயற்குழுக் கூட்டத்தில் இரா.சம்பந்தனின் பதவி விலகல் குறித்து கூட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே தன்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்?’ என இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும் என சக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக இரா.சம்பந்தன் தம்முடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

அத்துடன் தம்மை நேரடியாக கொழும்பில் சந்திக்குமாறு இரா.சம்பந்தன் கோரியிருப்பதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.எனினும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வவுனியாவில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அதில் இரா.சம்பந்தன் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என மாவை குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே இரா.சம்பந்தன் ஒய்வு பெற்றால் ஏற்படும் வெற்றிடத்திற்கு மாவை சேனாதிராசாவின் பெயரை கட்சி முக்கியஸ்தர்கள் பரிந்துரைத்துள்ளனர்.