இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்: அவுஸ்திரேலியாவில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலையடுத்து அவுஸ்திரேலியாவில் அடல்எயிட் பகுதியில் பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் கண்டித்துள்ளார். அத்துடன், இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட அவுஸ்திரேலியர்கள் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அடல்எயிட் பகுதியில் கடந்த வாரம் பள்ளிவாசல்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில், வுட்வில் நோத்  பகுதியில் உள்ள அல் காலலில்  பள்ளிவாசல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் எரிவாயு சிலிண்டர் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசல் சுவர் பகுதியளவு சேதமடைந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போதுதான் பொதுவெளியில் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் அவுஸ்திரேலியாவில் உள்ளக பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

பலஸ்தீன ஆதரவாளர்களுக்கும், யூத சமூகங்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவுஸ்திரேலியாவில் முஸ்லிம் விரோத போக்கும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.