கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டஇரு தமிழரின் பெயரை நீக்கியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு.


பயங்கரவாதத்தை ஆதரித்த குற்றச்சாட்டில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று முதல் அமுலாகும் வகையில் குறித்த நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ரமேஷ் எனப்படும் நிக்கலப்பிள்ளை அன்டனி எமில் லக்ஸ்மி காந்தன் என்பவரை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரும் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், முருகேசு ஸ்ரீ சண்முகராஜா என்பவரை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.2014ஆம் ஆண்டு முதல் இருவரும் பயங்கரவாதத்தை ஆதரித்த குற்றச்சாட்டின் பேரில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.