இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பயணமானார் .

இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றார்.

அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் இஸ்ரேல் செல்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்  தற்போது இஸ்ரேலின் டெல் அவிவிலுக்கு வந்தடைந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, போரில் இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை வழங்குவது குறித்து ரிஷி சுனக் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில், காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும், காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும்.

ஆனால், அதனை ஆக்கிரமிக்கக்கூடாது என்றும், ஹமாஸ் அமைப்பிற்கு பாலஸ்தீனியர்கள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பு, அல்கொய்தா அமைப்பை விட பயங்கரமானது என்றும் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, காஸாவில் மருத்துவமனை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றார். அங்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.