லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி!

நாளை மறுநாள் வெளியாகும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு புதுச்சேரியில்  காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு நாள் வெளியாகவுள்  நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், அதன்படி, அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்கட்டும். இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்கலாம். அந்த மனுவை நாளை மதியத்துக்குள் அரசு பதில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிப்பட்டிருந்தது.