போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை – இஸ்ரேல் பிரதமர்.

ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் மைப்பு இருக்கும்வரை மனிதாபிமான உதவிகள் எதுவும் செய்யமுடியாது எனவும் திட்டவட்டமாக இஸ்ரேல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒருவரத்துக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடங்கியதை அடுத்து, இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், ஹமாஸ் அமைப்புக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று தனது தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கமும் ஒடுக்கப்பட வேண்டும் என கூறி இஸ்ரேலிய படை தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது.