செனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் ஆய்வு செய்ய உத்தேச குழு!

செனல் 4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர், எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.