ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில்313 பலி.
ஹமாஸ் படையினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 313ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் முன்னோடியில்லாத வகையில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) காசா பகுதி வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் படையினர் மீது, கடுமையாக தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, இஸ்ரேல் ராணுவம் இன்று தெற்கு இஸ்ரேல் மற்றும் காசா பகுதியில் வான்வழித் தாக்குலில் ஈடுபட்டு வருகிறது. இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 313 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், காசாவில் பிடிபட்ட இஸ்ரேல் மக்கள் மற்றும் வீரர்களையும் ஹமாஸால் இயக்கத்தினர் பிணைக் கைதிகளாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.