ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,000ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து 6 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, ரிக்டர் அளவுகளில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இருந்தாலும், இன்று காலை 1000 பேர் உயிரிழந்ததாக முதலில் சொல்லப்பட்டது. இப்பொது, 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பலர் காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு தகவலின்படி, ஆறு கிராமங்கள் என பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. மேலும், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 3000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.