நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு தோட்ட ஆலயத்தில் திருட்டு – சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்.

நானுஓயா நிருபர் செ.திவாகரன்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் (5) வியாழக்கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் திருடனின் வருகையும் ஆலயத்தினுல் திருடும் செயற்பாடுகள் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் சிசிடிவி கேமராவில் குறிப்பிட்ட சில காட்சிகள் கொண்டு அவை பரீசீலணை செய்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இதற்கு முன்னரும் மூன்று முறைகள் இவ் ஆலயத்தில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தாழிமணி தங்க ஆபரணங்களையும் ஆலய ஒலிபெறுக்கி உபகரணங்கள் மற்றும் ஆலய உண்டியலை காணிக்கை பணம் என்பன திருட்டு போயிருந்தமை தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இருப்பினும் அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக தடயங்களை சேகரித்து ஆலயத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை உதவியாக கொண்டும் வழக்கு பதிவு செய்து நுவரெலியா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.