ஸ்காட்லாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சி பாரிய வெற்றி.

ஸ்காட்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.தேசியக் கருத்துக் கணிப்புகளில்  வரும் ஆண்டில் ,  பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சியைவிட தொழிற்கட்சி முன்னிலை வகிக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமானால், கடந்த தசாப்தத்தில் ஸ்காட்லாந்தில், ஸ்காட்லாந்து தேசியக் கட்சியிடம் இழந்த நிலத்தின் பெரும்பகுதியை மீண்டும் பெற வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது மாற்றத்திற்கான நேரம்,  இந்த மாற்றப்பட்ட தொழிற்கட்சி அதை வழங்க முடியும் என்ற  செய்தியை  Rutherglen மற்றும் Hamilton West  மக்கள் தெளிவாக தெரிவிக்கிறார்கள்  என்று தொழிலாளர் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்  தெரிவித்தார்.

கோவிட்-19 விதிகளை மீறியதற்காக  மார்கரெட் ஃபெரியர் லண்டன் நாடாளுமன்றத்தில் அவரது இருக்கையை பறி கொடுத்ததை அடுத்து கிளாஸ்கோவில் உள்ள ஒரு பகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.தொழிற்கட்சி வேட்பாளர் மைக்கேல் ஷாங்க்ஸ் 17,845 வாக்குகளைப் பெற்றார், இரண்டாவது இடத்தில் இருந்த SNP வேட்பாளர் கேட்டி லூடனை 8,399 வாக்குகளைப் பெற்றார்.