கொழும்பு-15 மணிநேர நீர் விநியோகத்தடை!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி இன்று மாலை 05.00 மணி முதல் நாளை (08) காலை 08.00 மணி வரையிலான காலப்பகுதியில் கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

அவசர பழுது காரணமாக இந்நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.