உக்கிரைனை கைவிடும் மேற்குலக நாடுகள்.

மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் உதவிகளில் தற்போது நிச்சயமற்ற சூழல் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதாவது உக்ரைனுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வரும் அமெரிக்கா இனி வரும் காலங்களில் ஆயுதம், வெடிமருந்துகளை விநியோகிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அத்துடன்  மேற்குலக நாடுகளிடம் உக்ரைனுக்கு வழங்குவதற்கு போதிய வெடிமருந்து இருப்பு இல்லாமல் இருப்பதாகவும்,  இதனால் வெடிமருந்து உற்பத்தியை அதிகரிக்குமாறும்  நேட்டோ நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  உக்ரைனுக்கு ஆதரவாக நின்றதாக கருதப்படும் அமெரிக்க சபாநாயகர் கெவின் மக்கார்த்தி, தனது குடியரசுக்கட்சி சகாக்களால் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் உக்ரைனுக்குரிய அமெரிக்க உதவியின் எதிர்காலம் குறித்து மட்டுமல்ல உக்ரைனுக்குரிய வெடிமருந்து வினியோகத்திலும் புதிய நிச்சயமற்ற நிலை எழுந்துள்ளது. உக்ரைன் ரஷ்யாவுடனான தனது போரை 20 வது மாதமாக எதிர்கொள்ளும் நிலையில், மேற்கின் வெடிமருந்து கையிருப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.