அழகான சர்வாதிகார ஆட்சியாளராக மாற தயாராக இருக்கின்றேன்:பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிப்பு.

சஜித் பிரேமதாச என்பவர் மாற்றத்தை விரும்பாத பாரம்பரிய அரசியல்வாதி எனவும் அவரிடம் இருந்து நாட்டு மாற்றமான ஒன்றை எதிர்பார்க்க முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி தான் நம்பும் அரசியல் நிரோட்டத்தில் பயணிப்பதில்லை என்றும், அவர்கள் காலம் கடந்து போன மக்கள் நிராகரித்துள்ள பராம்பரிய அரசியல் முறையில் பயணிக்கின்றனர் எனவும் தெரிவித்தள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சில பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி செல்லும் தவறான பாதையை அறிந்தும் கருத்து வெளியிட முடியாது அச்சத்தில் இருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி பாரம்பரிய அரசியல் பயணத்தில் இருந்து விடுப்பட வேண்டும். நாட்டில் மாற்று அரசியலை ஏற்படுத்த வேண்டும்.தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தமது கட்சியை போன்றே பாரம்பரிய அரசியல் விடயங்களையே பேசுகிறார்.

வேறு எந்த மாற்றங்களும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்தன்னை வேட்பாளராக நிறுத்தினால், கட்சியை நாட்டையும் வெற்றி பெற செய்து காட்ட தயாராக இருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.நடைமுறையில் உள்ள அரசியல் முறையை புரட்டி போட்டு விட்டு அழகான சர்வாதிகார ஆட்சியாளராக மாற தயாராக இருக்கின்றேன்.சர்வாதிகாரி என்றால் ஹிட்லரை போன்ற சர்வாதிகாரி அல்ல. ஊழலுக்கு எதிரான ஜனநாயக ரீதியிலான சர்வாதிகாரியாக மாற தயார் எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.