மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் Zombie Drugs’ இலங்கைக்கு ஊடுருவியுள்ளதாக தகவல்.
மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் ‘Zombie Drugs’இலங்கைக்கு ஊடுருவியுள்ளதாகவும் அவை ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் ஹோமியோபதி வைத்தியர் விராஜ் பெரேரா தெரிவித்திருந்தார்.இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Zombie Drugs’ என்பது விலங்குகளை அமைதிப்படுத்த, கட்டுப்படுத்த, மிருக வைத்தியர்களால் பாவிக்கப்படும் மருந்துவகை அதிக செறிவில், சட்டவிரோதமாக, ஏனைய போதைப் பொருட்களுடன் கலந்து இந்த Zombie Drugs’ தயாரிக்கப்படுகிறது.
சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் ஒருவரே காட்டப்பட்டிருந்தாலும், அது சமூகத்தில் எவ்வளவு பரவலாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.இது தான் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கும் நாமம். நாம் நினைப்பது போல யுத்தமோ, வடகொரியாவோ, ரஷ்யாவோ அல்ல. நியூயோர்க், பிலடெல்பியா, லிவர்பூல், லண்டன் போன்ற உலக பெரு நகரங்கள் இப்போது இந்த வகை போதைப் பொருள் பாவனையால் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கி வருகின்றன.
அதிலும் குறிப்பாக இந்த நாடுகளில் வாழும் வாலிபர்கள்இ இளம் பெண்கள் இதற்கு அடிமையாவது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் முழு நகரமும், நாடும் பாதிக்கப்படுகின்றது.நாட்டை ஆள்பவர்களும், சட்டத்தை நிலைநாட்டுபவர்களும் போதைப்பொருளில் இலாபம் அடைவதால் போதைப்பொருளுக்கு உரிய தீர்வைக் கொண்டுவருவதில் அக்கறை காட்டுவதில்லை எனவும் வைத்தியர் விராஜ் பெரேரா மேலும் தெரிவித்திருந்தார்.