உக்ரைனுக்கு பிரித்தானிய வீரா்களை அனுப்பும் திட்டம் தற்போதுக்கு இல்லை: பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு.


உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரா்களை அனுப்பும் திட்டம் தற்போதுக்கு இல்லை என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உக்ரைன் வீரா்களுக்கு பயிற்சியளிப்பதற்காக பிரித்தானிய படையினா் அந்த நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்று பாதுகாப்பு அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் கூறியிருந்த சூழலில் அந்த கருத்தை திரும்ப பெறும் வகையில் இதை சுனக் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் வீரா்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக வீரர்களை அங்கு அனுப்புவதற்கான திட்டம் தற்போதைக்கு இல்லை  என்றும் இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் கூறிய கருத்து, என்றாவது ஒரு நாள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மட்டுமே பிரதிபலிக்கிறது என்றும்,எதிா்காலத்தில் உக்ரைன் வீரா்களுக்கு அந்த நாட்டில் பிரித்தானிய ராணுவத்தினா் பயிற்சியளிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது குறிப்பிடத்தக்கது