வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் முதல் ஒவ்வொரு துறைக்கும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், தற்போது, நடப்பாண்டில் வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும், 2023-ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.  அதன்படி, வேதியியல் துறையில் சாதித்த குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.