மலேசியாவில் 3 இலங்கையாகள் படுகொலை: 8 சநதேக நபர்களில் ஒருவர் மரணம்  .

மலேசியா கோலாலம்பூரில் வாடகை வீட்டில் இருந்த மூன்று இலங்கையர்கள் கடந்த செப்டம்பர் 22ம் திகதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 20 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்களாவர்.கடந்த திங்கட்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு இலங்கை சந்தேகநபர்களும் சம்பவத்தன்று கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதிகளும் அவர்களில் அடங்குவதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குறித்த தம்பதியரில் கணவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.இந்தநிலையில் இரண்டு பிரதான சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு மாடி வீட்டின் மூன்று இலங்கையர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டனர். இதன்படி மொத்தமாக ஏழு சந்தேகநபர்கள் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.