தமிழ்நாட்டு கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது-பிரதமர் மோடி

தமிழகத்தில் இந்து கோவில்கள் தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுபாட்டிடல் செயல்பட்டு வருகிறது. இது குறித்து இன்று பிரதமர் மோடி தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் விமர்சித்து பேசினார். தெலுங்கானாவில் இந்த வருட இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி நிஜமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அதில் பேசிய பிரதமர் மோடி,  தென் தமிழகத்தில் குறிப்பாக தமிழகத்தில் இந்து கோவில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் (அறநிலையத்துறை) இருக்கிறது. இதன் மூலம் ஆலயத்தின் சொத்துக்களை , வருமானங்களை மாநில அரசு (திமுக அரசு) முறைகேடாக பயன்படுத்தி வருகிறது.

இந்துக்களின் கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது போல, ஏன்  சிறுபான்மையினர் (கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) ஆலயங்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் எடுக்க மறுக்கிறது. இந்து ஆலயங்களை மட்டும் ஏன் மாநில கட்டுபடுத்தி வைக்கிறது. இதனை கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வலியுறுத்தி கோவில்களை விடுவிக்க முயற்சி மேற்கொள்ளுமா.? என கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் மக்களை சாதி ரீதியாக, மத ரீதியாக பிரிக்க பார்க்கிறது. இந்தியாவில் ஒரே சாதி தான் பெரிய சாதி.அது ஏழை சாதி. ஏழை மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல தான் பாஜக முயற்சி செய்து வருகிறது. கடந்த 9ஆண்டுகளில் ஏழை மக்களின் வாழ்க்கை முன்னேறியுள்ளது எனவும் இன்று தெலுங்கானா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.