நீதி செத்துக்கிடக்கிறது அடையாள போராட்டத்துக்கு அழைப்பு-சிவஞானம் ஸ்ரீதரன்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களாலும் குறிப்பாக சரத் வீரசேகர போன்றோரது இனவாத கொக்கரிப்புகளாலும் இந்த குடும்பதோடு இங்கு வாழ முடியாமல் அச்சுறுத்தல் காரணமாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
அதிலும் சட்டமா அதிபர் அவரை கூப்பிட்டு வற்புறுத்தியதும் அச்சுறுத்தியதன் காரணமாகத்தான் அவர் இந்த நாட்டை விட்டு புறப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முழுமையான செய்திகளும் கிடைக்க பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு தமிழ் நீதிபதி இந்த மண்ணிலே இருந்து கொண்டு ஒரு பணியை ஆற்ற முடியாத இக்கால கட்டத்தில், அவர் இந்த நாட்டை விட்டு ஓட வேண்டிய ஒரு சூழல் எவ்வாறு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்தும் நீதித்துறை எப்படி செத்து கிடக்கும். அது தமிழர்களுக்கான நீதியை எப்படி வழங்கும் என்பதை வெளி உலகத்துக்காகவும் இரண்டாம் திகதி கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக எங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டிலே அனைத்து மக்களும் திரண்டு அதற்கு ஒரு அடையாள எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 9.30 இலிருந்து 10.30 வரையிலான ஒரு மணி நேரம் ஒரு அடையாள போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க இருக்கிறோம்.
தயவு செய்து கிளிநொச்சி மாவட்டத்திலே இருக்கிற வர்த்தக சமூகத்தினர் சேவைச் சந்தை வர்த்தக சமூகத்தினர் மற்றும் இங்கே இருக்கின்ற தொழில் சங்கங்கள் சார்பாக இருக்கின்ற அனைத்து தொழில் சங்க உரிமையாளர்கள் அவர்களுடைய அங்கத்தவர்கள் பொதுமக்கள் எல்லோரும் திரண்டு தொடர்ந்து நாங்கள் இந்த மண்ணிலே எவ்வாறு அச்சுறுத்த பட போகிறோம். நாங்கள் இன்னும் எதிரிகளாகவே இந்த மண்ணில் வாழ போகிறோம். அடக்கு முறைக்குள் வாழ போகிறோம். இந்த அடக்கு முறையின் உண்மை முகத்தை வெளியிலே கொண்டு வந்த நீதி அரசர் சரவணராஜா அவர்களுக்கு ஆதரவாகவும் அதே நேரம் இந்த அரசசிங்கத்தினுடைய இந்த வன்ம கோட்டையும் அரசாங்கத்தின் நீதியற்ற முறையை வெளி உலகத்துக்கு சொல்லும் வகையில் இந்த அடையாள போராட்டத்தில் கலந்து விடுமாறு உங்கள் எல்லோரையும் அன்பாடும் வினயதோடும் கேட்டு கொள்கிறேன்.
குறிப்பாக கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இன்று காலை திங்கள் கிழமை 9.30 இலிருந்து 10.30 வரையும் இந்த போராட்டம் இந்த இடத்திலே நடைபெற இருக்கிறது. எல்லோரும் திரண்டுவந்து எங்களுடைய உரிமைக்குரலை ஒரு மணி நேரம் வழிநடத்த வேண்டும் என்று உங்கள் எல்லோரையும் கேட்டு கொள்கிறேன். அதே நேரம் யாழ்ப்பாணத்தில் 4 ஆம் திகதி புதன்கிழமை அனைத்து கட்சிகளும் ஏற்பாடு செய்கின்ற மனித சங்கிலி போராட்டத்திலும் நாங்கள் எல்லோரும் திரண்டு வந்து பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என்று இந்த இடத்திலே கேட்டுக்கொள்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார்