கோவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடித்தமைக்காக இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.

ஹங்கேரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளான கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோர் முறையே 2023ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை எம்ஆர்என்ஏ கோவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடித்தமைக்காக வென்றுள்ளனர் என விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதுடன், உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கும் முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.வைத்தியர் கட்டலின் கரிகோ மற்றும் வைத்தியர் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோர் முறையே பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள். எம்ஆர்ன் ஏ தொழில்நுட்பம் இப்போது ஏனைய நோய்களுக்கும் புற்றுநோய்க்கும் கூட ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.