பாராளுமன்றத்தில் பாலியல் துன்புறுதல்கள்: விசாரணைகள் ஆரம்பம்.

பாராளுமன்றத்தில் பணியாற்றும் சில பெண் ஊழியர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு இலக்காவதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சட்டத்தரணி ஹங்ச அபேரத்ன தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி துஷானி ரோஹணதீரவின் உத்தரவிற்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் நடாத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதவி இடைநிறுத்தப்பட்ட இரு அதிகாரிகளுக்கு குற்றப் பத்திரிகை விரைவில்  கையளிக்கப்படவுள்ளதாகவும் அந்த குற்றப் பத்திரிகை தொடர்பில் தமது தரப்பு விளக்கங்களை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கையளிக்க வேண்டும் எனவும் தெரிய வருகின்றது. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.