இலங்கையில் அறிமுகமாகும் eTraffic Police செயலி.

இலங்கை முழுவதும் eTraffic police app பொலிஸ் செயலி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதியில் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

போக்குவரத்து திணைக்களம்
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவின் பணிப்புரைக்கு அமைவாக போக்குவரத்து அமைச்சு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

இதனால், பாதசாரிகள் மற்றும் பயணிகள் செய்யும் குற்றங்களை புகைப்படங்கள் அல்லது வீடியோ வடிவில் இந்த செயலிக்கு அனுப்புமாறு வீதியை பயன்படுத்தும் ஓட்டுநர்களிடம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட கேட்டுக் கொண்டார்.