வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பிரச்சினைகளுக்கு தீர்வு: அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல.
பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பிரச்சினைகளுக்கு இந்த வருட வரவு-செலவுத் திட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் நிதியமைச்சரும், நிதி அமைச்சும் நெருக்கடிகளுக்கு மத்தியில் செயற்படுவதாகவும், இவ்வாறான நிலையில் சில இன்னல்களுக்கு மக்கள் ஆளாக வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது மருத்துவத் துறைக்காக அல்ல. நாட்டை பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் எனத் தெரிவித்தார்.சுகாதார சேவையை சரிவின்றி நடத்துவதற்காக வைத்தியர்களின் ஓய்வு வயதை 63 ஆக உயர்த்துதல், ஒப்பந்த அடிப்படையில் வைத்தியர்களை பணியமர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.