இலங்கைப் பெண் அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கபூருக்கு சுற்றுலா சென்ற வேளையில் கணவனால் படுகொலை.

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த தனது தோழி சிங்கபூருக்கு சுற்றுலா சென்ற வேளையில் கணவனால் படுகொலை செய்யப்பட்டதாக அவரது தோழி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த இலங்கை பெண் பலருக்கு தோழியாகவும், எப்போதும் அன்பான வார்த்தைகளையும் புன்னகையையும் கொண்டவர் என தோழியால் அன்புடன் நினைவுகூரப்பட்டார்.

எலிசபெத் கேம்பர் என்பவர் தனது வகுப்புத் தோழியான செவ்வந்தி மதுகா என்ற கொல்லப்பட்ட இலங்கை பெண்ணின் மரணம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார்.அவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில் வகுப்பு தோழிகளாகும். கடந்த 9 ஆம் திகதி Holiday Inn Express Singapore Katong இல் இலங்கை பெண் அவரது கணவர் ஈஷான் என்பவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செவ்வந்தி சிங்கப்பூரில் விடுமுறையில் இருந்தபோது, இந்த சோகம் நடந்ததாக மெல்பேர்னில் அமைந்துள்ள அவரது பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து இருந்த பின்னர் தனது கணவருடன் விடுமுறையில் செல்வதில் செவ்வந்தி மிகவும் உற்சாகமாக இருந்ததாக தோழி குறிப்பிட்டார். 32 வயதான இவர், அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வந்த நிலையில், அவரது கணவர் இலங்கையில் பணிபுரிந்து வந்ததாக கேம்பர் தெரிவித்தார்.