தமிழ் பேசிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான விவேக் ராமசாமி.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான விவேக் ராமசாமி, தமிழில் உரையாடும் விடியோ வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.
பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் உள்ள விவேக் ராமசாமி பல்வேறு தரப்பினரை சந்தித்து தேர்தலுக்கான ஆதரவை திரட்டி வருகிறார்.
இந்த நிலையில், பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றில் விவேக் ராமசாமி பங்கேற்று இருந்தார்.அப்போது விவேக் ராமசாமியிடம் பேசிய தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஒருவர், ‘அடுத்த தலைவராக உங்களை பார்க்க விரும்புகிறேன். அதற்காக வாழ்த்துகள்’ என கூறினார் உடனடியாக விவேக் ராமசாமி, ‘எனக்கும் தமிழ் தெரியும்! நானும் தமிழ் பேசுவேன், பாலக்காடு தமிழ்’ என்று தமிழில் சிரித்தபடி பதிலளித்தார்.