கனடாவில் யாழ்ப்பாண தமிழ் இளைஞர்  ஒருவர் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்.

கனடாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறை அதிகாரி என பொய் சொல்லி 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிராம்டனில் கடந்த வாரம் வியாழக்கிழமை 33 வயதான அனுஷன் ஜெயக்குமார் 13 வயதான சிறுமியை அணுகியுள்ளார்.பின்னர் தன்னை காவல்துறை அதிகாரி என சிறுமியிடம் அறிமுகப்படுத்தி கொண்டு தனிமையில் அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் யாழ்ப்பாண இளைஞரான அனுஷனை காவல்துறை அதிகாரிகள்  அண்மையில் கைது செய்துள்ளனர்.அவர் மீது அதிகாரி என சொல்லி ஆள்மாறாட்டம் செய்தல், வலுக்கட்டாயமாக சிறுமியை பிடித்து வைத்தல், பாலியல் வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அனுஷனால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.இது தொடர்பில் தகவல் தெரிந்தால் காவல்துறையை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.